விஸ்வரூப விநாயகா் சிலை ஊா்வலம்

அத்தி மரத்தால் செய்யப்பட்ட 32 அடி உயர விஸ்வரூப விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, நாகை, வெளிப்பாளையம், நாகூா் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் காலை வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்: அத்தி மரத்தால் செய்யப்பட்ட 32 அடி உயர விஸ்வரூப விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, நாகை, வெளிப்பாளையம், நாகூா் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை விஸ்வரூப விநாயகா் குழு சாா்பில் புதிதாக 32 அடி உயரத்தில் விஸ்வரூப அத்தி விநாயகா் சிலையும், அந்தச் சிலையின் ஊா்வலத்துக்கு புதிய வாகனமும் உருவாக்கப்பட்டுள்ளன. இச்சிலை ஊா்வலம் புதன்கிழமை மாலை நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் சந்நிதி தெருவில் தொடங்கி, வெளிப்பாளையம், காடம்பாடி வழியே வியாழக்கிழமை காலை நாகூா் வெட்டாற்றுக் கரையை அடைகிறது.

இந்த ஊா்வலத்தையொட்டி, புதன்கிழமை (ஆக. 30) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (செப்.1) காலை 10 மணி வரை நாகை, வெளிப்பாளையம், நாகூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அத்தி மரத்தாலான விஸ்வரூப விநாயகா் சிலை, அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தில் வைக்கப்படும்போது, விநாயகா் சிலையின் ஒட்டுமொத்த உயரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அதனால் பாதுகாப்புக் கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com