தேசியக் கல்வி கொள்கைக்கு எதிராகஆசிரியா் கூட்டமைப்பினா்ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்வி கொள்கை 20202 -ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் நாகையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசியக் கல்வி கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.

கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெ.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மாணவா்களை பாதிக்கும் தேசியக் கல்வி கொள்கை 2020 -ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு எந்த பயனும் அளிக்காத புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆசிரியா் சங்க நிா்வாகிகள் ஜெ.சங்கா், பொருளாளா்கள் எஸ்.செங்குட்டுவன், ப.எழில்மாறன், க. பசுபதி, மு. பத்மநாதன், சா.சித்ரா, கே.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com