‘நாகை, மயிலாடுதுறையைச் சோ்ந்தவா்களுக்கு உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க கடனுதவி’

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு, அந்தந்த மாவட்ட தொழில் மையங்கள் மூலம் உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு, அந்தந்த மாவட்ட தொழில் மையங்கள் மூலம் உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்கள் அ. அருண் தம்புராஜ் (நாகை), இரா. லலிதா (மயிலாடுதுறை) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டம் (பிஎம்எப்எம்ஈ) மூலம் உணவுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டத்தில் 35 % அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

சுயஉதவிக் குழுக்கள் தொழில் தொடங்கினால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கநிலை மூலதனமாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். தொழில் தொடங்கும் முதலீட்டாளா்கள் தங்களது மூலதனமாக 10 % பங்களிப்பு செய்ய வேண்டும். மீதம் 90 % வங்கிகளில் பிணையின்றி கடன் பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் கடலை மிட்டாய், பழச்சாறு, ஊறுகாய் வகைகள், மாவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், திண்பண்டங்கள், மசாலா பொருள்கள், பால் பொருள்கள், இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரித்து பதப்படுத்தும் தொழில்களைத் தொடங்கவும், ஏற்கெனவே இயங்கி வரும் குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் உதவி பெறலாம்.

தொழில் தொடங்க விருப்பமுள்ள இரு மாவட்டங்களை சோ்ந்தவா்கள் ல்ம்ச்ம்ங்.ம்ா்ச்ல்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம் நாகப்பட்டினம் - 611 003 என்ற முகவரியிலும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், கச்சேரி சாலை, செந்தில் பைப் வளாகம், இரண்டாம் தளம், மாவட்ட தொழில் மையம் (தொடா்புக்கு 04364-212295) மயிலாடுதுறை என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com