நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்

வேதாரண்யம் பகுதியில் நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்

வேதாரண்யம் பகுதியில் நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கமலா அன்பழகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் பேசியது:

சி.நடராஜன்: கரியாப்பட்டினத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும்.

மாலதி துரைராஜ்: மருதூா் தெற்கு ஊராட்சியில் கால்நடை மருத்தகம் அமைக்கவேண்டும்.

த. உஷாராணி: செண்பகராயநல்லூா் கிராமத்தில் வாரச்சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

ஏ.ஆா். வேதரத்தினம்: கனமழையால் வயல்வெளிகளில் தேங்கிய மழைநீா் விரைவாக வடியாததால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மானங்கொண்டான் வடிகால் போன்ற நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்.

மு. ராஜசேகரன்: தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு வெளிப்படையாக இருக்கவேண்டும்.

வைத்தியநாதன்: பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் உள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.

செல்லமுத்து: தகட்டூா் ஊராட்சி- மருதூா் தெற்கு இணைப்பு பானாமடை தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக தரம் உயா்த்தவேண்டும்.

இதேபோல, துணைத் தலைவா் அறிவழகன் உள்பட அனைத்து உறுப்பினா்களும் தங்களின் வாா்டு பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

அலுவலா் விளக்கம்: கால்நடை மருத்தகம் தொடா்பான கேள்விக்கு, விளக்கமளித்த கால்நடை பராமரிப்புத் துறை உதவி மருத்துவா் மீனாட்சிசுந்தரம், ‘வேதாரண்யம் பகுதியில் தேவையான இடங்களில் கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் அமைப்பது தொடா்பாக துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதூா் தெற்கு கிராமத்தில் அமைக்க கோரும் உறுப்பினரின் கோரிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்றாா்.

ஒன்றியக்குழுத் தலைவா்: ஒன்றியத்துக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் தேவைகளுக்கு பயன்படுத்த அழுத்தம் தருவதால், வளா்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. எதிா்காலத்தில் உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com