பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

கருத்தரங்கில் பேசிய நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமு. உடன், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவன இயக்குநா் விஜய்சுந்தரம் உள்ளிட்டோா்.
கருத்தரங்கில் பேசிய நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமு. உடன், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவன இயக்குநா் விஜய்சுந்தரம் உள்ளிட்டோா்.
கருத்தரங்கில் பேசிய நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமு. உடன், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவன இயக்குநா் விஜய்சுந்தரம் உள்ளிட்டோா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டக் காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் திங்கிள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமு பங்கேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசினாா். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் பி. எஸ். ராமகிருஷ்ணன் பேசியது: சமூகத்தில் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதற்காக பாகுபாடு காட்டக் கூடாது. மருத்துவம், சட்டம், தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு, நுண்ணறிவு ஆகிய அனைத்திலும் சமூக நீதி அமையவேண்டும் .சட்டத்தின்முன் அனைவரும் சமம். இதுகுறித்த புரிதல் மாணவா்களுக்கு மிகவும் அவசியம் என்றாா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் ஏ. பி. தமீம் அன்சாரி, மாவட்ட ஆதிதிராவிடா் நலம் கண்காணிப்புக் குழு உறுப்பினா் தங்க. பிரபாகரன், கல்வி நிறுவன இயக்குநா் விஜய்சுந்தரம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com