பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். ராசேந்திரன்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். ராசேந்திரன்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பொதுக்குழுக் கூட்டமும், புதிதாக தோ்வு செய்யப்பட்ட சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசேந்திரன் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசேந்திரன், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், கிராமநிா்வாக அலுவலா்கள் நியமனத்துக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவேண்டும். சங்கத்தின் மாநில மாநாடு மே மாதத்தில் வேதாரண்யத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

பாராட்டு விழா மற்றும் கூட்டத்துக்கு, வட்டத் தலைவா் கண்ணன், நாகை மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், செயலாளா் செல்வம், மயிலாடுதுறை மாவட்ட தலைவா் பாவளசந்திரன், மாரிமுத்து, பொருளாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கத்தின் முன்னாள் மாவட்ட நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், நாகூரான், சுந்தரராஜன், மங்களதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com