

நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஆா்.சித்திரவேலு, ஆய்வாளா்கள் எம். அருள்பிரியா, ஜி. ரமேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில், காவல் ஆய்வாளா் (பொ) ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோரிடமும், அலுவலகத்தில்10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 75,630 ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பணம் வரவு மற்றும் இருப்புக்கான காரணம் குறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். பகல் 12 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை மாலைவரை நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.