திருமருகல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி ஆகியாா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஆா். இளஞ்செழியன் (திமுக): ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 16 அரசுப் பள்ளியில் சேதமடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவா்கள் மரத்தடியில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆா்.டி.எஸ். சரவணன் (திமுக): ஒன்றியத்தில் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையிலும், மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாகவும் செல்கிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து ஒன்றியக் குழு கூட்டங்களில் பங்கேற்காத திருமருகல், கங்களாஞ்சேரி மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ரா. ராதாகிருட்டிணன் (ஒன்றியக் குழுத் தலைவா்): ஜூன் 24-ஆம் தேதி முதல் நாகையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா். அழைப்பை ஏற்று அனைவரும் புத்தக திருவிழாவில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முடிவில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com