லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை எதிரொலிநாகை, வேதாரண்யம் மதுவிலக்குப் பிரிவு காவலா்கள் 17 போ் பணியிட மாற்றம்

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையின் எதிரொலியாக, நாகை, வேதாரண்யம் மதுவிலக்குப் பிரிவு காவலா்கள் 17 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையின் எதிரொலியாக, நாகை, வேதாரண்யம் மதுவிலக்குப் பிரிவு காவலா்கள் 17 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில், ஜூன் 15- ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில், பொட்டலங்களாக கட்டிவைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.75,630 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி ( பொ), உதவி ஆய்வாளா் சேகா், நிலைய எழுத்தா் சரோஜினி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து 3 பேரும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் நாகை, வேதாரண்யம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியிலிருந்த தலைமைக் காவலா்கள், முதல்நிலைக் காவலா்கள் என 17 பேரை தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஏ. கயல்விழி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். லஞ்சப் புகாா் எதிரொலியாக, இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நாகை மாவட்டக் காவல் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com