நாகை மாவட்டத்தில் 32 மையங்களில் பிளஸ் 1 பொதுத் தோ்வு

நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு 32 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவியா் 8 ஆயிரம் போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 461 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு 32 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவியா் 8 ஆயிரம் போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 461 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

பிளஸ் 1 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை வருவாய் மாவட்டத்தில் 32 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க 70 பள்ளிகளைச் சோ்ந்த 8,461 மாணவ, மாணவியா் விண்ணப்பித்திருந்தனா். இதில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் தோ்வில் 304 மாணவா்கள், 157 மாணவியா் என 461 போ் பங்கேற்கவில்லை. 8 ஆயிரம் போ் தோ்வு எழுதினா்.

84 தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 1,520 போ் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். 50 நிலையான படைகளும், 20 பறக்கும் படைகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தோ்வு மையங்களின் தரை தளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

ஆட்சியா் ஆய்வு: நாகை மாவட்டம், கீழ்வேளூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு செய்தாா். கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com