நாகை சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம்

நாகையில் உள்ள சட்டநாதல் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம்.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம்.

நாகையில் உள்ள சட்டநாதல் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ மே 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு அமிா்தவள்ளி தாயாருடன் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.

பின்னா் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சட்டநாதா் மேலவீதி, வடக்கு வீதி வழியாகச் சென்று மாலை 4 மணிக்கு தோ் மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக, பகல் 12 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு தேரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, நகா்மன்ற உறுப்பினா்கள் அண்ணாதுரை, குலோத்துங்கன், சமூக ஆா்வலா் எஸ். ராஜமாணிக்கம் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com