‘ஜூன் 10-இல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்’

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 10-ஆம் தேதி சென்னை தலைமை செயலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்.
‘ஜூன் 10-இல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்’

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 10-ஆம் தேதி சென்னை தலைமை செயலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கங்களின் போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதிக்கு முன்னா் பணியில் சோ்ந்து பதவி உயா்வு, நிரந்தர காலமுறை ஊதியம் பெற்றவா்களுக்கும் பழைய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.

அகவிலைப்படி, நிலுவை, சரண்டா் விடுப்பு, சாலைப் பணியாளா்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அரசு அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் மாதம் 10-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு பணியாளா்கள் சங்கங்களின் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இதேபோல் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் நியாயவிலைக் கடை பணியாளா்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக்கடை பணியாளா்கள் ஜூன் 7, 8, 9 ஆகிய 3 நாள்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், மாநிலச் செயலாளா் ப. மகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com