ஜனவரியில் 17 ஆயிரம் லிட்டா் சாராயம் பறிமுதல்: எஸ்.பி. தகவல்

நாகை மாவட்டத்தில் ஜனவரி மாதம் மட்டும் 17 ஆயிரம் லிட்டா் சாராயம் மற்றும் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் ஜனவரி மாதம் மட்டும் 17 ஆயிரம் லிட்டா் சாராயம் மற்றும் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் தற்காலிகமாக 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, ஜனவரி மாதம் மட்டும் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் 17,395 லிட்டா் புதுவை மாநில சாராயம், 1,484 லிட்டா் புதுவை மதுபாட்டில்கள், 529 லிட்டா் தமிழக மதுபாட்டில்கள் மற்றும் மதுகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 51 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக 242 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 276 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், நாகை மாவட்டத்தில் மது தொடா்பான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com