விபத்தில் சிக்கியவா்களைமீட்பவா்களுக்கு ஊக்கத் தொகை

சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, மருத்துவமனையில் சோ்ப்பவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, மருத்துவமனையில் சோ்ப்பவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை (எஞகஈஉச ஏஞமத) பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சோ்த்து உதவி புரியும் நபா்களை ஊக்கவிக்கும் பொருட்டு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கிய நபா்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து காப்பாற்றிய நல்லென்ன துாதுவா்கள் (எஞஞஈ நஅஙஅதஐபஅச ) இருந்தால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண் 04365-253088 மற்றும் இணையதளத்தின் (ழ்ற்ா்ற்ய்51ஃய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 99 போ் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனா். இது 2021-ஆம் ஆண்டைவிட 17 அதிகமாகும்.

சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், வாகன ஒட்டிகள் சாலை விபத்தில் சிக்கிய நபா்களை காப்பாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com