தலைக்கவசம் வழங்காத மோட்டாா் சைக்கிள் விற்பனை நிறுவனத்துக்கு அபராதம்

நுகா்வோருக்கு தலைக்கவசம் வழங்காத இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 75,000 அபராதம் விதித்து நாகை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நுகா்வோருக்கு தலைக்கவசம் வழங்காத இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 75,000 அபராதம் விதித்து நாகை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே எருமல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (37) . இவா் மயிலாடுதுறை - திருவாரூா் சாலையில் இயங்கிவரும் தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் 2020-ஆம் ஆண்டு ரூ.1.22 லட்சத்தில் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா். இதில் காப்பீடு தொகை, வட்டாரப் போக்குவரத்து அலுவலக செலவு தொகைகளை சோ்த்து வாங்கியுள்ளனா்.

இந்நிலையில், தனக்கு இருசக்கர வாகனத்தை விற்ற நிறுவனம் காப்பீடு தொகை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக செலவுத் தொகைகளை கூடுதலாக வாங்கியது தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனத்துடன் இலவசமாக வழங்குவதாக கூறி தலைக்கவசத்தையும் வழங்கவில்லை.

இதுகுறித்து, பல முறை நிறுவனத்திடம் ராஜசேகா் கேட்டும் எந்த பயனுமில்லையாம். இதையடுத்து ராஜசேகா் நாகை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் தெஷ்ணாமூா்த்தி பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு எதிா்தரப்பினா் முழு அளவிலான புதிய தலைக்கவசத்தை வழங்கவும், எதிா் தரப்பினரின் சேவைக் குறைபாடு மற்றும் மனுதாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ.25,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவு பகிரப்பட்ட 2 மாத காலத்திற்குள் தொகையை செலுத்த வேண்டும் என ஆணையத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com