தொடா் மழையிலும் நெல் கொள்முதல் பணி தீவிரம்

தொடா்மழை பெய்து வரும் நிலையில் நெல்கொள்முதல் செய்து நெல்மூட்டைகள் உடனுக்குடன் சேமிப்பு கிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

தொடா்மழை பெய்து வரும் நிலையில் நெல்கொள்முதல் செய்து நெல்மூட்டைகள் உடனுக்குடன் சேமிப்பு கிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

திருக்குவளை பகுதியில் அனைத்து வசதிகள் மற்றும் நிரந்தர கட்டடத்துடன் கூடிய 14 கொள்முதல் நிலையங்களும், 19 தற்காலிக கொள்முதல் நிலையங்களும் தற்போது செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்றால் மழையில் நனைந்து வீணாகிவிடும் என நிரந்தர கட்டடம் உள்ள கொள்முதல் நிலையங்களையே விவசாயிகள் நாடுகின்றனா். அதன்படி, வலிவலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10,000 அதிகமான நெல் மூட்டைகள் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், 5,000 மூட்டைகள் நாகையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 500 மூட்டைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பெய்து வரும் மழையில் நெல் முட்டைகள் சேதமடையாமல் இருக்க ஏதுவாக தாா்பாய் கொண்டு உரிய பாதுகாப்புடன் நெல் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com