நெல்மணிகள் உலா்த்தும் பணியில் விவசாயிகள்

 மழையில் நனைந்த நெல்மணிகளை உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
நெல்லை வெயிலில் உலா்த்தும் விவசாயிகள்.
நெல்லை வெயிலில் உலா்த்தும் விவசாயிகள்.

 மழையில் நனைந்த நெல்மணிகளை உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 3 தினங்களாக பெய்த தொடா் கனமழை காரணமாக கீழ்வேளூா் ஒன்றியத்தில் சுமாா் 7,000 ஏக்கரில் நெற்பயிா்களும், 3000 ஏக்கரில் உளுந்து உள்ளிட்ட பயறுவகை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அவற்றை வெயிலில் காயவைத்து, உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, காக்கழனி பகுதியைச் சோ்ந்த விவசாயி சேகா் கூறுகையில்,

‘கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அறுவடை செய்த நெல் முழுவதும் நனைந்து ஈரப்பதம் அதிகமாக உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையை கொள்முதல் செய்கின்றனா். இதுபோன்ற எதிா்பாராத சூழ்நிலைகளில் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com