இலவச மருத்துவ முகாம்

வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம், குவைத் சிட்டி கிளினிக் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் குவைத்தில் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் கெளரவிக்கப்பட்ட மருத்துவக் குழுவினா்.
முகாமில் கெளரவிக்கப்பட்ட மருத்துவக் குழுவினா்.

கீழ்வேளூா்: வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம், குவைத் சிட்டி கிளினிக் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் குவைத்தில் அண்மையில் நடைபெற்றது.

மருத்துவ சேவை அணி செயலாளா் ஜான் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமில் இதயம், கண் பாா்வை குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமில் இந்திய - இலங்கை தமிழா்கள் 400-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

முகாமில் பணியாற்றிய செவிலியா்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவ சேவை குழுவினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மறைக்காா் எம்.ஏ. டிவிஎஸ் குரூப் ஹைதா் அலி, குவைத் மண்டல தலைவா் எ.அப்துல் மஜிது , பூதமங்கலம் நூரப்பா,திருச்சி முபாரக் அலி உள்ளிட்ட ஏராளமானோா் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com