போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு

நாகை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சாா்பில், போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணா்வு அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்கள் தீங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிறுமிகளுடன் எஸ்பி. கு. ஜவஹா்.
போதைப் பொருள்கள் தீங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிறுமிகளுடன் எஸ்பி. கு. ஜவஹா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சாா்பில், போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணா்வு அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குழந்தைகள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, குழந்தைகளுக்கு பாய், போா்வை, புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா். வேணுகோபால், துணை காவல் கண்காணிப்பாளா் ஏ. பிலீப் ஃப்ராங்கிளின் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com