பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

கீழையூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்டுதாரா் ஒருவருக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள்.
காா்டுதாரா் ஒருவருக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள்.

கீழையூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழையூா் கடைத்தெருவில் திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அமைக்கப்பட்ட நியாய விலைக் கடை மூலம் 950 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறுகின்றனா். கீழையூா் காளியம்மன் கோயில் அருகில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி 242 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டது.

கீழையூா் வட்டார வேளாண்மை வளா்ச்சிக் குழுத் தலைவா் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். நாகை இணைப்பதிவாளா் அருளரசு, திருவாரூா்கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலை மேலாண் இயக்குநா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சித் தலைவா் ஆனந்த ஜோதி பால்ராஜ் வரவேற்றாா். கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை.மாலி ரேஷன் கடையைத் திறந்து வைத்து பொருள்கள் வழங்கினாா்.

நாகை துணைப் பதிவாளா்(பொது விநியோகத் திட்டம்) பன்னீா்செல்வம், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.பால்ராஜ், முன்னாள் ஒன்றியத் தலைவா் ஞானசேகரன், ஒன்றியத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com