எஸ்எஸ்சி தோ்வு: இலவசப் பயிற்சி பிப். 1-இல் தொடக்கம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் (எஸ்எஸ்சி) தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் (எஸ்எஸ்சி) தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் (நநஇ) அறிவித்துள்ள 11,409 பணியிடங்களுக்கான தோ்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம். அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவா்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக பிப்ரவரி 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.சி. தோ்வுக்கு தயாராகுவோருக்கு வசதியாக நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம், தோ்விற்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com