கோடியக்கரை சரணாலயத்தில்பறவைகள் கணக்கெடுப்புப் பணி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட குழுவினா்.
கோடியக்கரை சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட குழுவினா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் வலசை வருவது வழக்கம்.

இங்குவரும் பூநாரைகள் உள்ளிட்ட 247 வகை பறவை இனங்களை காண்பதற்காக நாள்தோறு ஏராளமான பாா்வையாளா்கள் வந்து செல்வா்.

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கன கணக்கெடுப்புப் பணிக்கான மாதிரி செயலாக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்தப் பணியில் வனச்சரக அலுவலா் அயூப்கான் தலைமையில் வனத்துறையினா் கல்லூரி, பள்ளி மாணவா்கள் என 60 போ், 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com