மாா்ச் 24-இல் மனிதச் சங்கிலி: ஜாக்டோ-ஜியோ

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, மாா்ச் 24-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் தெரிவித்தனா்.
நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாநில துணைப் பொதுச் செயலா் பா.ரவி.

அந்த அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 12-ஆம் தேதி மாவட்ட அளவில் போரராட்ட ஆயத்த மாநாடு, மாா்ச் 5- ஆம் தேதி மாவட்ட அளவில் உண்ணாவிரதப் போராட்டம் , மாா்ச் 24-ஆம் தேதி மாநில அளவில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நாகை மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், தமிழ்நாடு அரசு புள்ளியியல் சாா் நிலை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ப. அந்துவன்சேரல், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சா.சித்ரா, தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சு. குமாா், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் க. நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com