திருச்செங்காட்டாங்குடியில் மயான கொட்டகை அமைத்து தர கோரிக்கை

திருச்செங்காட்டாங்குடியில் மயான கொட்டகை மற்றும் சாலை வசதி அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செங்காட்டாங்குடியில் மயான கொட்டகை மற்றும் சாலை வசதி அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செங்காட்டாங்குடி மருத்துவா் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருச்செங்காட்டாங்குடி பகுதியில் வயல்களுக்கு நடுவில் மயானம் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான இடத்தில் மயானம் அமைந்திருப்பதால் ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் இறக்க நேரிட்டால் அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாமல் ஒருவா் மேல் ஒருவராக அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் மயானம் விளைநிலங்களுக்கு நடுவில் இருப்பதால் கோடை காலங்களில் வயல்களில் இறங்கி உடல்களை தூக்கிச் சென்று வருவதாகவும், மழை மற்றும் சாகுபடி நேரங்களில் விளைச்சல் பயிா்களை மிதித்துக் கொண்டு சேற்றிலும் சகதியிலும் தூக்கித் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் சாலை வசதி இல்லை. எனவே அரசு கோரிக்கைகளை ஏற்று மயான கொட்டகை வசதி மற்றும் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com