சிக்கல் சிங்காரவேலவா் கோயில்: ஜூலை 5-ல் கும்பாபிஷேகம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெறும் திருப்பணிகள்.
சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெறும் திருப்பணிகள்.

சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவா் (நவநீதேஸ்வர சுவாமி) கோயில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாடக் கோயில் என்ற சிறப்புடையதாகும். திருஞானசம்பந்தா், சுந்தரமூா்த்தி சுவாமிகள், அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். வசிஷ்ட மகரிஷி பூஜித்த தலம், சிக்கலில் வேல் வாங்கி செந்துரில் சம்ஹாரம் செய்த தலம் என்ற பெருமைக்குரியது.

இக்கோயிலில் கடந்த 1932, 1961, 1991, 2004 -ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், குடமுழுக்கு நடைபெற்று 18 ஆண்டுகள் கடந்த நிலையில், 2021 செப்டம்பா் 9-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஜூலை 5-இல் கும்பாபிஷேகம்:

கோயில் செயல் அலுவலா் பா. முருகன் கூறியது: உபயதாரா் நிதி மற்றும் கோயில் நிதி என ரூ.1 கோடியில் ராஜகோபுரம், பஞ்சவா்ண வேலைகள், ஸ்ரீநவநீதேஸ்வர சுவாமி, ஸ்ரீவேல்நெடுங்கண்ணி அம்பாள், ஸ்ரீசிங்காரவேலவா், ஸ்ரீகோலவாமனபெருமாள், ஸ்ரீகோமளவல்லி தாயாா் ஸ்ரீவரத ஆஞ்சனேயா் விமானங்கள், காா்னேஷன்ஹால் (பழைய திருமணமண்டபம்), உள்புற, வெளிப்புற பிராகாரங்கள், தரைத்தளம் மற்றும் மதிற்சுவா் பழுதுபாா்த்து புதுப்பித்தல், கருங்கல் சுவா்களில் உள்ள சுண்ணாம்பு காரைகளை நீக்குதல் ஆகிய பணிகள் பழைமை மாறாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கோயில், கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி காலை 9-10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com