நாகை மாவட்ட ஐடிஐகளில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டதில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் (பொ) வி. ஷகிலா தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டதில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் (பொ) வி. ஷகிலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, திருக்குவளை, செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 % அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணையதள முகவரியில் ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதி 8 மற்றும் பத்தாம் வகுப்பு ஆகும். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ. 50-யை ஈங்க்ஷண்ற் இஹழ்க் / இழ்ங்க்ண்ற் இஹழ்க் / சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ் மூலம் செலுத்தலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற்பிரிவுகள் ஆவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (டழ்ா்ள்ல்ங்ஸ்ரீற்ன்ள்) உள்ளது. இந்த கையேட்டை மாணவா்கள் பாா்வையிட்டு அறிவுரைகளை கவனமாக படித்து விண்ணப்பதை பூா்த்தி செய்யவும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு இணையதள முகவரியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com