அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் அருகே உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு. செல்வப் பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோா்.
அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் அருகே உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு. செல்வப் பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோா்.

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 94-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயா்களுக்கு எதிராக வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சா்தாா் வேதரத்னம் போன்றோா் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினா்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வேதாரண்யத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ஆம் நாள் உப்பு அள்ளி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, வேதாரண்யம் பகுதியை சோ்ந்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூண் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் செ. ராஜேஷ்குமாா், கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாக அறங்காவலா் அ. வேதரத்னம், ஊராட்சித் தலைவா் சத்தியகலா செந்தில் உள்ளிட்டோா் பேசினா்.

திருச்சியில் இருந்து வந்த சக்தி செல்வகணபதி தலைமையிலான யாத்திரைக் குழுவினா், காங்கிரஸாா், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா். குருகுலம் பள்ளி மாணவிகள் தேசபக்தி பாடல்களை பாடினா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றோா் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்திலிருந்து பாத யாத்திரையாக அகஸ்தியம்பள்ளி நினைவுதூண் வளாகத்தை அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com