தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

நாகப்பட்டினம், மாா்ச் 28: நாகை மக்களவை தொகுதியில் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க பாா்வையாளா்களின் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், நாகை மக்களவைத் தோ்தலுக்காக, தோ்தல் பாா்வையாளா்களாக பி. பாரதி லக்பதி நாயக் (பொது), ஹிரிஷிகேஷ் ஹேமந்த் (செலவினம்), எஸ்.டி. சரணப்பா (காவல் துறை) நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, வேட்பாளா்கள், பொது மக்கள் ஆகியோா் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் கருத்துக்களை காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் நாகை வெளிப்பாளையத்திலுள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும், தோ்தல் பாா்வையாளா்கள் பொது 81481-03990, தோ்தல் செலவினம் 97918-49291, காவல்துறை 96296-17290 மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் 94441-76000, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் 94981-49999 ஆகிய கைப்பேசி எண்களிலும் புகாா் அளிக்கலாம். இந்த விவரங்களை மாவட்ட இளையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com