வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பொறையாா் ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் சுரேஷ், கல்லூரி முதல்வா் மனோன்மணி பாா்வதி, கிராம நிா்வாக அலுவலா் ராஜா முன்னிலை வகித்தனா். சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் முருகானந்தம், தோ்தல் தனி வட்டாட்சியா் பாபு ஆகியோா் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்கு அளிக்கும் செயல்முறை, வாக்குரிமை குறித்த கையேடுகளை புதிய வாக்காளா்களிடம் அளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com