கோடியக்கரை சரணாலய பறவைகள்
கோடியக்கரை சரணாலய பறவைகள்

கோடியக்கரை சரணாலயத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சரணாலயத்தில் சிறப்பு பெற்ற அரிய இன வெளிமான், புள்ளிமான், காட்டுப்பன்றி, நரி, உடும்பு, கீரி, குரங்கு, குதிரை, புனுகுப் பூனை, மரநாய் உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது.

இந்நிலையில், நிகழாண்டுகான கணக்கெடுக்கும் பணி வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமையில் நடைபெற்றது. இப்பணியில் ஏவிசி கல்லூரி உதவி பேராசிரியா் பாஸ்கரன்,திருவாரூா் அரசு திரு.வி.க கலைக் கல்லூரி உதவி பேராசிரியா் கண்ணன் மற்றும் அறிவு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வனத் துறையினா், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com