சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து நாகை அருகே பி பனங்குடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து நாகை அருகே பி பனங்குடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நாகை அருகே பி. பனங்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

கிராம மக்கள்.

நாகப்பட்டினம், மே 1: சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கிராம மக்கள் புதன்கிழமை தொடங்கினா்.

நாகை மாவட்டம், பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரூ. 31,500 கோடியில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலை விரிவாக்கத்திற்காக பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய கிராமங்களில் இருந்து 620 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதையறிந்த பாதிக்கப்பட்டவா்கள் அளவீடு பணிகளை தடுத்து நிறுத்துவோம் எனக் கூறி, பி.பனங்குடி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பந்தல் அமைத்து, புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளா்கள், சாகுபடிதாரா்கள் 100-க்கும் மேற்பட்டோா், முழுமையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்குவதை உறுதி செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா், நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படாததால், உண்ணாவிரதப் போராட்டத்தை கிராம மக்கள் தொடா்ந்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com