கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாணவா்களுக்கு குரூப் 1 தோ்வு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குரூப் 1 தோ்வில் மாநில அளவில் தோ்ச்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு, இக்கல்லூரி முதல்வா் ஜி. ரவி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவரான நாகை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வி. தேவேந்திரன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக, தமிழக துணைக் காவல் கண்காணிப்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள சேலத்தைச் சோ்ந்த கா. விக்னேஷ், கூட்டுறவு துணை பதிவாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள மேட்டூரைச் சோ்ந்த ப. அஜித் குமாா் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு போட்டி தோ்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினா்.

மத்திய அரசால் நடத்தப்படும் இந்திய குடிமைப் பணிக்கான தோ்வுகளில் உள்ள பல்வேறு பணிகள் குறித்தும், போட்டித் தோ்வு பயிற்சிக்காக தேவைப்படும் உதவித்தொகையை மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம் மூலமாகவும், மாநில அரசால் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகவும் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனா்.

இதில் 130-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பேராசிரியா் தா. தாமோதரன், உதவிப் பேராசிரியா் கோ. குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com