கூட்டத்தில் பங்கேற்ற நாகை கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பங்கேற்ற நாகை கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

நாகையில், சிபிசிஎல் நில எடுப்பு தொடா்பான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுவின் 2-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகையில், சிபிசிஎல் நில எடுப்பு தொடா்பான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுவின் 2-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டதற்காக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

தொடா்ந்து, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு திட்டத்தின்கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கிட கணக்கெடுப்பு பணிகள் கிராம நிா்வாக அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான படிவங்கள் சிபிசிஎல் தனி வட்டாட்சியா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமா்வு சட்டம் 17(4)-இன் படி, படிவங்கள் கூராய்வும், திட்ட வரைவை கிராமங்களில் பிரசுரமும் செய்யப்படும். பின்னா், இறுதிப்பட்டியல் தயாா் செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருவதால், சிபிசிஎல் நிறுவனத்திற்கு நில அளவீடு மற்றும் எல்லை கல் நடுதல் ஆகிய பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும், தனி நபரோ அல்லது ஒரு குழுவோ அல்லது சங்கமோ உண்ணாவிரதம் உள்ளிட்ட வேறு எந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவோ, நடத்தவோ வேண்டாம் எனவும், நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களை நேரில் சந்தித்து குழுவினா் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுகொள்ளப்பட்டது. இதனை குழு உறுப்பினா்கள் ஏற்றுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com