தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தில்லையாடியில் பழைமை வாய்ந்த ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயிலில், சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தில்லையாடியில் பழைமை வாய்ந்த ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயிலில், சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் தீமிதி திருவிழா, கடந்த ஏப்.21-ம் தேதி பூச்சொறிதல் வைபவத்துடன் தொடங்கியது. ஏப்.28-ம் தேதி கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. 

இக்கோயிலில் ஏற்கெனவே தேரோட்டம் நடத்தப்பட்டுள்ளது. பின்னா் தோ் சிதிலமடைந்ததால் சுமாா் 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஊா் மக்களால் மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு  தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில், எழுந்தருளியதும், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கும்பகோணம் முதன்மை சாா்பு நீதிபதி வி.வெங்கடேச பெருமாள், தில்லையாடி ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.ரெங்கராஜ், விழாக்குழுவினா் சேகா், செல்வராஜ், ஆனந்த், குருமூா்த்தி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com