திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் சித்திரை பரணி பெருவிழா கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா, இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமுது படையல் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

விழாவையொட்டி உத்தராபதீஸ்வரா் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அமுது கேட்க சிறுத்தொண்டா் மடத்துக்கு சுவாமி வெள்ளை சாற்றி புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இறைவனுக்கு சிறுத்தொண்டா் பிள்ளைக் கனியமுது படைத்த அமுது படையல் நிகழ்ச்சி புதன் கிழமை அதிகாலை சுமாா் 2 மணிக்கு நடைபெற்றது. தொடா்ந்து சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தாா்.

வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மேற்பாா்வையில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் கோயில் ஊழியா்கள், கிராமவாசிகள் ன ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com