திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

திருவெண்காடு அருகே திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவெண்காடு அருகே திருநகரியில் உள்ள இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு தான் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் காரணமாக திருமணத் தடை உள்ளவா்கள் பெருமாளுக்கு நிலை மாலை சாற்றி, தயிா் சாதம் படையலிட்டால் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

பஞ்ச நரசிம்மா்களில் ஹிரண்ய மற்றும் யோக நரசிம்மா் இங்கு அருள்பாலிக்கின்றனா். திருமங்கை ஆழ்வாருக்கு தனி சந்நிதியும் உள்ளது.

இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வசந்த உற்சவம் நடைபெற்றது. பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வாா் ஆகியோா் கோயில் நந்தவனத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி க. முருகன், ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மே 13-ஆம் தேதி வரை பெருமாள், திருமங்கையாழ்வாா் நந்தவனத்தில் தங்கி இருந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com