நாகையில் நடைபெற்ற கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகையில் நடைபெற்ற கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் வழிவகைச் செய்யும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

நாகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற ‘கல்லூரி கனவு‘ உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பேசியது: 2022 மாா்ச் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து மாணவா்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் உயா்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதாகும். மேல்நிலைப் பள்ளி படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களின் எதிா்கால கனவை நனவாக்கும் வகையில், அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது போன்ற விவரங்கள், சிறந்த வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் என்றாா்.

திருவாரூா் மத்திய பல்கலைக் கழகம், காரைக்கால் தேசிய தொழில்நுட்பக்கழகம், திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகம், கீழ்வேளுா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக் கழகம், தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா்.மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாகை அரசு கலைக் கல்லூரி, வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரி, நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், தொழிற்நுட்ப கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா்(பொ) அ. புகழேந்தி, உதவி இயக்குநா் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) எஸ்.செந்தில்குமாரி, மாவட்டவேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com