திருவாரூர் மாவட்டத்தின் பொதுவுடைமைவாதியும், மறைந்த எம்.பி.யுமான சித்தமல்லி எஸ்.ஜி. முருகையனின் 36-வது நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சித்தமல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சித்தமல்லியைச் சேர்ந்தவர் எஸ்.ஜி. முருகையன் (படம்). இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நாகை எம்.பி.யாக இருந்தபோது, 1979-ல் கொலை செய்யப்பட்டார். அவரின் 39-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சித்தமல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் தா. பாண்டியன், மாநிலத் துணைச்செயலர் கோ. பழனிச்சாமி, எம்எல்ஏ கே. உலகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை எஸ்.ஜி.எம். ரமேஷ், எஸ்.ஜி.எம். லெனின் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.