அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

மன்னார்குடி  அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

மன்னார்குடி  அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பெருகவாழ்ந்தான் பாம்புகணியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தர்மன்(62). இவர், செவ்வாய்க்கிழமை மாலை  பெருகவாழ்ந்தானில் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், காயமடைந்த தர்மன் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com