கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பட்டாசு விற்பனை தொடக்கம்

திருவாரூர் மேல வடம்போக்கி தெருவிலுள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகம் முன்பு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை கடை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவாரூர் மேல வடம்போக்கி தெருவிலுள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகம் முன்பு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை கடை புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
பட்டாசுக் கடையை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எஸ். கலியபெருமாள் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசியது:
பண்டகசாலை பட்டாசு விற்பனை கடையில் அய்யன், அரசன், அணில், வசந்தா மற்றும் முன்னணி நிறுவன பட்டாசுகள் உள்ளன. இதேபோல், பண்டகசாலையின் பட்டாசு விற்பனை கிளைகள் திருவாரூர் தெற்கு வீதி, எல்லையம்மன் சன்னதி, திருத்துறைப்பூண்டி,  வேதாரண்யம், நன்னிலம் மற்றும் நாகப்பட்டினம் நீலா வடக்கு வீதி ஆகிய இடங்களிலுள்ள கிளைகளில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. அக்கிளைகளில் நியாயமான விலையில், தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
எங்களிடம் அனைத்து வகையான மளிகைப் பொருள்கள், எண்ணெய் வகைகள் மற்றும் ஷாப்பிங் பொருள்கள் அனைத்தும் தரமாகவும், நியாயமான விலையில் வாங்கிட பண்டகசாலை அங்கமான சுயசேவைப் பிரிவுகளை அணுகலாம். மேலும், பண்டக சாலையால் நடத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் அம்மா மருந்தகங்களில் நுகர்வோர் நலன் கருதி 12 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார் கலியபெருமாள்.
நிகழ்ச்சியில், பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் பிரபாகரன், துணைப் பதிவாளர் மற்றும் பொது மேலாளர் டி. காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com