பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

விடுதலைச் சிறுத்தை கட்சிக் கொடி கம்ப சேதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிகாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:46 am IST

மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிகாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏப்.14-ஆம் தேதி சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புள்ளவராயன்குடிக்காடு கிராமம் பிரதான சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, அதே இடத்தில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில், கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வி.த. செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். ரமணி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.