நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கவிதை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற 200 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உதவும் மனங்கள் அறக்கட்டளையின் 11-ஆவது ஆண்டு தொடக்க விழா , மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழா, பாரத ஆன்மிக கல்வி பயிலக 2-ஆவது ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு உதவும் மனங்கள் அமைப்பின் புரவலர் எல். ஜெயக்குமார் தலைமை வகித்தார். டி.கே.வி. பேரவைத் தலைவர் எம். பாபு, புரவலர் ராஜன்.ரமேஷ் ,நூலகர் சு. ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மகாகவி பாரதியார் பற்றிய கவிதை, ஓவியப் போட்டிகளை வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜாராமன் தொடங்கி வைத்தார்.
செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பல்ளி முதல்வர் ஜெ. செல்வம், சாரண ஆசிரியர் ஈ. வினோத், ஆசிரியர் கி. சேதுரத்தினம், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் எம். அப்பாவு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கவிதைப் போட்டியில் வென்றவர்களுக்கு மன்னார்குடி காவிரி எஸ். ரெங்கநாதன், ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நீலன்.அசோகன் புரவலர் பட்டயம் பெற்றார். உதவும் மனங்கள் அமைப்பின் நிறுவனர் எஸ்.எஸ். குமார் வரவேற்றார். பேராசிரியர் காத்தமுத்து நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









