முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 

Updated On :25 டிசம்பர் 2018, 6:14 am IST

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இணையதள வசதி செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.10-ஆம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுதவிர, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கருப்புப் பட்டை அணிந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பா. சற்குணம் தலைமை 
வகித்தார்.
 இதில், மன்னார்குடி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் மற்றும் கூத்தநால்லூர் வருவாய் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு கைகோர்த்து நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.