திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்துஸ்தான பெட்ரோலியம் சார்பில், குருதேவன் எரிவாயு முகவாண்மை மற்றும் கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சாக்ஸம் 2018 என்ற நிகழ்ச்சியில், சிறப்பான சுற்றுப்புற சூழ்நிலைக்குத் தேவை எரிபொருள் சிக்கனம் எனும் தலைப்பில்கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில், நாள்தோறும் இரவு சமையல் பணி முடிந்தவுடன் ரெகுலரேட்டரை மூடவேண்டும், ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. சிலிண்டரில் இருந்து எரிவாயு வெளியேறும்போது எளிதில் உணர்ந்துகொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் என்ற கெமிக்கல் வாசனையை உணர்ந்ததும் உடனடியாக எரிவாய்வை நிறுத்திவிட வேண்டும், இல்லையென்றால் சிலிண்டரிலிருந்து திரவம் தரையில் பரவிவிடும் சின்ன தீப்பொறி ஏற்பட்டாலோ , எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும், மேலும் சிலிண்டரில் கேஸ் தீர்ந்தவுடன் மறுபடியும் சிலிண்டரை குலுக்கி பார்க்கக் கூடாது என்று பாதுகாப்பு கருத்துகள் கூறப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், திருத்துறைப்பூண்டி இந்துஸ்தான் பெட்ரோலியம் கேஸ் ஏஜென்ஸி மேலாளர் சரண்யா, கல்வி புரவலர்கள் ஷேக் தாவூத் இப்ராகிம்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!
திமுக வெற்றிக்கு தீவிர களப் பணி: பொன். முத்துராமலிங்கம் விளக்கம்

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

