திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவராகப் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக திருவாரூருக்கு மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வருகை தந்தார். கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்ற அவர், அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தந்தை, சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் கருணாநிதியின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்களுமான கே.என்.நேரு, உ.மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

