அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வலங்கைமான் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில்அண்மையில் நடைபெற்ற முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில்

Updated On :3 செப்டம்பர் 2018, 1:26 am

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில்அண்மையில் நடைபெற்ற முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சா.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற ஆவன செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்று திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு முதல் கட்டமாக 36 பேருக்கு ரூ. 10 லட்சத்து 84 ஆயிரத்து 880 சம்பா பயிர்க் கடன் வழங்கப்பட்டது.  அத்துடன், தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்திய ஜெயம் மகளிர் குழுவுக்கு ரூ. 5 லட்சம், பத்ரகாளியம்மன் மகளிர் குழுவுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அஷ்டலெட்சுமி மகளிர்சுய உதவிக் குழுவுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
மேலும், 13 நபர்களுக்கு விவசாய நகைக் கடன் ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் தனிநபர் கடனும் வழங்கப்பட்டன. மளிகைக் கடைக்கு கடன் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் பா.பூபதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் க.சம்பத், தா.காமராஜ், வ.சின்னப்பா, வீ.ஆறுமுகம், தி.ராஜேஸ்வரி, மு.ரஜினி, ரா.ராஜா, ஜெ.தனலெட்சுமி, த.ரவிச்சந்திரன், சங்கச் செயலாளர் (பொ) ப.கலைவாணன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிறைவில் சங்க எழுத்தர் ப.உலகநாதன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.