மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருவாரூர் மாவட்ட எல்லையில் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான

Updated On :3 செப்டம்பர் 2018, 11:30 pm

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான மன்னார்குடியை அடுத்த வடுவூரில் திங்கள்கிழமை திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்ட பின்னர், தஞ்சை வழியாக திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் பூர்வீக இல்லத்துக்குச் செல்வதற்காக கார் மூலம் வந்தார். அப்போது, மாவட்ட எல்லையான மன்னார்குடியை அடுத்த வடுவூரில் பிரதான சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடுவூருக்கு ஸ்டாலின் வந்தவுடன் ஆளுயர மாலையை கட்சியின் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி பி. ஆடலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  சித்தமல்லி ந. சோமசுந்தரம், பி. ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, நீடாமங்கம் தெற்கு ஒன்றியச் செயலர் வீ. மாயவநாதன், வடக்கு ஒன்றியச் செயலர் விசு. அண்ணாதுரை, மன்னார்குடி மேற்கு ஒன்றியச் செயலர் க. தனராஜ், கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர். தேவதாஸ், வடக்கு ஒன்றியச் செயலர் பால. ஞானவேல், மன்னார்குடி நகர செயலர் வீரா. கணேசன்  உள்ளிட்ட திரளான திமுகவினர், சார்பு அணி நிர்வாகிகள் நூல்கள், சால்வைகளை ஸ்டாலினுக்கு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.