மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை உத்ஸவர் ராஜகோபால சுவாமி ராஜ அலங்கராத்தில் எழுந்தருளினார்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் 18-நாள் நடைபெறும் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ஆம் நாளான புதன்கிழமை சுவாமி பல்லக்கு சேவையில் கோயிலின் நான்கு வெளி பிராகாரங்களை சுற்றி வந்து, யானை வாகன மண்டபத்தை சென்றடைந்தார். இரவு, வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் மற்றும் மண்டகப்படிதாரர் மன்னார்குடி டி. பிரபு செருமடார் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.