தினமணி செய்தி எதிரொலியாக நன்னிலம் வட்டம், வேலங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட கமுகக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர்த் தொட்டி சனிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
கமுகக்குடி கிராமத்தில் பழுதடைந்த நிலையில், மாசுபடிந்து காணப்பட்ட குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்க வேண்டுமென தினமணி நாளிதழில், ஏப்ரல் 30-ஆம் தேதி செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நன்னிலம் பேரூராட்சி அலுவலர்கள் கமுகக்குடி கிராமம் சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை சனிக்கிழமை சுத்தம் செய்தனர். நீண்டகாலமாக பராமரிப்பின்றி கிடந்த குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்ததற்காக பேரூராட்சி அலுவலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.