புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின் சத்துக்களை கொடுக்கும் தவசி முருங்கைகாய் மற்றும் கீரையை சாப்பிட்டு பயன்பெறலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஜெ. வனிதாஸ்ரீ, மு. ராமசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: வைட்டமின் குறைபாடு உள்ள குழந்தைகள் செக்குர்மனிஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தவசி முருங்கை கீரையை சாப்பிடுவது நல்லது. இக்கீரையில் வைட்டமின்கள் ஏ (பார்வை நன்றாக தெரிவதற்கும்) இ பி (மூளை செயல்பாடு மற்றும் செல் வளர்ச்சி மாற்றத்திற்கு) இ சி (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்) இ டி (சூரிய ஒளி வைட்டமின்) மற்றும் கே (ரத்தம் உறைதலுக்கு அவசியமானது) ஆகியவை உள்ளன. இதுமட்டுமல்லாமல் கால்சியம் இ பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் இந்த கீரையில் அடங்கியுள்ளன. இவ்வளவு சத்துக்கள் இருப்பதால் ஹார்லிக்ஸ் கீரை இ மல்டி வைட்டமின் கீரை என்று அழைக்கிறார்கள்.
ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல் புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும். இக்கீரை எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. மூளை நன்கு வளர்ச்சி பெற இதுபயன்படுகிறது.
ரத்த விருத்திக்கும் இனவிருத்திக்கும் இது பயன்படுகிறது. இந்த கீரையை பச்சையாக கூட மென்று சாப்பிடலாம். புற்று நோயைக் தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாய்ப்பாலை அதிகமாக சுரக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. இந்த மல்டி வைட்டமின் கீரையை பருப்பு கலந்து சமைத்து சாப்பிடலாம் அல்லது கீரையை மற்ற கீரைகளோடும் கலந்து சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.